Tuesday, November 18, 2008

இலைக்காரன் பதிவு - ஒரு ரிட்பீட்...

இலைக்காரன் இவரது பதிவைப் படிக்காதவர்கள் ரொம்பக் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். தங்கத்தாரகை மேன்மைதங்கிய அம்மாவின் ஆதரவளராக தன்னை இனங்காட்டிக்கொண்டாலும். பதிவுகள் என்னவோ கொஞ்சம் சந்தேகமாத்தான் இருக்கும். அவரின் பதிவுகளுக்கும்.. அதற்கு சக பதிவர்களின் பின்னூட்டமும் சில வேளைகளில் நம்ம நரசிம்மராவ் போன்றவர்களையும் சிரிக்க வைத்துவிடும். எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிறாங்கலோ தெரியல்லப்பா...

சில வேளைகளில் இவரது பதிவுகளின் பின்னூட்டத்தை வாசிக்கும்போதே எனக்கு சிரிப்பை அடக்கமுடியாமல் போய்விடும் அந்தளவுக்கு நம்ப பதிவர்கள் பின்னூட்டங்கள் மூலம் புகுந்து விளையாடி இருப்பார்கள்

உக்காந்து யோசிப்பாங்கலோ..!

அப்படி ரசிக்க வைத்த பதிவும் அதற்கான பின்னூட்டங்களும் இங்கே.. இலைக்காரரே உங்கள் அனுமதி இல்லாமல் மறுபதிவு இட்டதற்கு மன்னிக்கவும். நான் உங்கள் ரசிகனுங்கோ..


இனி

இலைக்காராரின் பதிவு

தரம் தாழ்ந்த குமுதம்

மைனாரிட்டி ஆட்சி நடக்கும் தமிழகத்தின் முக்கிய பத்திரிக்கைகளில் ஒன்றான குமுதத்திற்கு என் கடுமையான கண்டங்கள். கேள்வி பதில் ஒன்றில் இந்த பதில் வந்து இருக்கின்றது.

"சொல்லவில்லை, பிதற்றியிருக்கிறார். வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா? ஊருக்கு ஒரு நீதி என்றால் ஜெயலலிதாவுக்கு மட்டும் தனி நீதி. கொழும்பிலும் வட கிழக்கு இலங்கையிலும் இன்றைக்குத் தமிழர்கள் உயிருக்கு உத்தரவாதமில்லாத நிலையில் ஒவ்வொரு நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும். தமிழ்ப்புத்தகம் வைத்திருப்பதும், தமிழ் பேசுவதும் படிப்பதுமே குற்றம் என்கிற நிலை அங்கே நிலவுகிறது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு தமிழனும் இன்று ஈழத்தமிழனின் நிலையைக் கண்டு கொதித்துக் கொண்டிருக்கிறான் என்பதுதான் உண்மை. அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்."

புலிகளால் அம்மாவின் உயிருக்கு பேராபத்து என்று அமெரிக்க உளவு ஸ்தாபனங்கள் தெரிவிக்கின்றன. போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார். இப்படிபட்ட பேராபத்தில் இருக்கும் உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவை பற்றி பிதற்றுகிறது குமுதம் இதழ்.

80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.

வாழ்க அம்மா. வீழ்க குமுதம்



இனி நம்ப சக பதிவர்களின் பின்னூட்டங்கள்

....................................................................................
ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.

By G.Ragavan at 10/29/2008 7:04 AM

....................................................................................

வாங்கோ!! வாங்கோ!!!

By Great at 10/29/2008 8:28 AM

....................................................................................
அரசு பதில்களை எல்லாம் இவ்வளவு சீரியஸ் ஆக எடுத்துக்கொள்ள தேவையில்லை .
இவர் எல்லாம் எப்படித்தான் டாக்டருக்கு படித்தாரோ தெரியலையே ? !!

By அருப்புக்கோட்டை பாஸ்கர் at 10/29/2008 8:59 AM
....................................................................................

g.ragavan அவர்களே,

வருகைக்கு நன்றி.

உலகின் ஒரே தங்க தாரகையான அம்மாவின் புகழ் பாடும் சிற்றிலை நான். என்னை போய் தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதியின் கட்சிகாரன் என்று சொல்வது சரியா?.

By இலைக்காரன் at 10/29/2008 6:01 PM
....................................................................................

ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒரு சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா? இல்லை எதிர்பா?

By தீலிபன் at 10/29/2008 8:48 PM
....................................................................................

இலைக்காரரே, நான் நம் பாரம்பரிய பத்திரிகைகளான தினமலர் மற்றும் துக்ளக் மட்டுமே படிப்பேன்.

By Great at 10/29/2008 9:59 PM
....................................................................................

நெத்தியடி!

By ஜ்யோவ்ராம் சுந்தர் at 10/29/2008 10:03 PM
....................................................................................

//
வங்காள தேசத்தில் ஒரு பிரச்சினை என்ற போது இந்தியா தலையிடவில்லையா? காஷ்மீர் தனி இராஜ்ஜியமாக இருந்த போது இந்திய இராணுவம் அங்கே நுழையவில்லையா? அவ்வளவு ஏன், இதே இலங்கைக்கு அமைதிப்படை செல்லவில்லையா?
//
போஸ்னியா செர்பியா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா?
அமேரிக்கா கியூபா போரில் இந்திய ராணுவம் தலையிட்டதா?
அவ்வளவு ஏன் ஸ்டார் வார் 1,2 ,3 etc.. இவற்றிலேல்லாம் இந்திய ராணுவம் தலையிட்டதா?
இதையெல்லாம் குமுதம் வசதியாக மறந்தது ஏன்?

By Great at 10/29/2008 10:07 PM
....................................................................................

//.... நொடியும் செத்துச் செத்துப் பிழைத்துக் கொண்டிருக்கும் பயங்கரம் போயஸ் தோட்டத்தில் குளிரூட்டப்பட்ட அறையில் சூப் குடித்துக் கொண்டிருப்பவருக்கு எப்படிப் புரியும்.
//
அம்மா ஏற்கனவே தமிழகத்து மக்கள் நலனுக்காக கொடநாடு எஸ்டேட்டில் ரெஸ்ட் எடுத்து, ரெஸ்ட் எடுத்து டயர்டு ஆகி போயஸ் தோட்டத்தில் ரெஸ்ட் எடுத்து வருகிறார். இதை புரிந்து கொள்ளாமல் சூப், திராட்சை ரசம் என்று கூறி அவரை மேலும் டயர்டு ஆக்கி ஐதராபாத் திராட்சை தோட்டத்திற்கு ரெஸ்ட் எடுக்க அனுப்பி விடுவார்கள் போலுள்ளதே..

By Great at 10/29/2008 10:18 PM
....................................................................................

//
அவர்களுக்கு கருணையும் ஆதரவும் காட்டாதவர்கள் தமிழர்களாக மட்டுமில்லை, மனிதர்களாக இருக்கவே அருகதையற்றவர்கள்."
//

அம்மா மனிதர் அல்ல, கருணை உள்ளம் கொண்ட அம்மா 80 கோடி இந்துக்கள் மனதில் வாழும் தெய்வம் என்பது குமுதம் இதழ் நடத்துபவர்களுக்கு தெரியாதா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா?

By Great at 10/29/2008 10:21 PM
....................................................................................

//
போயஸ் தோட்டத்தின் மீது குண்டு வீசுவதற்காக தான் புலிகள் விமானம் வாங்கி உள்ளனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
//
இது மட்டுமா.. அமேரிக்கா, ஈரான் போன்ற நாடுகள் அணுக்குண்டு சோதனை நடத்தியதே போயஸ் தோட்டத்தில் குண்டு வீசத்தானே. அதையே அம்மாவும் அம்மாவின் தொண்டர்களும் சமாளித்து விட்டோம். இவர்களைப் பார்த்து குண்டுக்கே குண்டா என்று அம்மாவின் பக்தர்களான 80 கோடி இந்துக்களும் எள்ளி நகையாடுகின்றனர்.

By Great at 10/29/2008 10:27 PM
....................................................................................

//
மதறாஸ் விமான நிலைய விரிவாக்கம் என்பது புலிகளின் விமானங்கள் பத்திரமாக இறங்கவும், பழுது பார்க்கபடவும் தான் என்று ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்து உள்ளார்.
//
சென்னையில் மேம்பாலங்கள் கட்டுவதே அதற்கடியில் புலிகள் தங்கள் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டரை பார்க் செய்யத்தான் என்றும் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளாரே!
சந்திராயன் 1 அனுப்பியதிலும் இதுபோல் ஏதாவது சூழ்ச்சி இருக்கும். அதையும் விரைவில் ஸ்ரீமான் சுப்பிரமணிய சுவாமி கண்டுபிடித்து தெரிவிப்பர் என்று நம்புகிறோம்.

By Great at 10/29/2008 10:36 PM
....................................................................................

//
80 கோடி ஹிந்துக்களும் குமுதம் இதழை ஆங்காங்கே எரித்து மைனாரிட்டி ஆட்சி புரியும் கருணாநிதிக்கு அனுப்புங்கள்.
//

இலைக்காரரே கொரியரில் அனுப்ப வேண்டுமா? அல்லது தந்தி(?) வாயிலாக அனுப்ப வேண்டுமா??
80 கோடி இந்துக்களும் குழப்பத்தில் உள்ளனர். தெளிவுபடுத்தவும்.

By Great at 10/29/2008 10:38 PM
....................................................................................

//
ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.

By G.Ragavan
//
//ஆம் ஆண்டின் சிறந்த நகைச்சுவை.எனக்கு ஒரு சந்தேகம் இந்த தளம் அம்மாவுக்கு ஆதரவா? இல்லை எதிர்பா?

By தீலிபன்
//
இலைக்காரரே என்ன பிதற்றல் இது? பாலபத்திர ஓணாண்டியை மிஞ்சி விடுவார்கள் போலுள்ளதே!!

By Great at 10/29/2008 10:40 PM
....................................................................................


great அவர்களே,

வருகைக்கும், பல பின்னூட்டங்களுக்கும் நன்றி.

உங்களுக்கு எது வசதியோ அது போல் செய்யுங்கள். ஆக மொத்தம் நம் எதிர்ப்பை மைனாரிட்டி அரசுக்கும், மைனாரிட்டி அரசை ஆதரிக்கும் குமுதம் அரசுவிற்கும் தெரியபடுத்தவேண்டும்.

By இலைக்காரன் at 10/29/2008 10:44 PM


....................................................................................


//G.Ragavan said...
ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.
//

repeatey!!!!

By லக்கிலுக் at 10/29/2008 11:50 PM



....................................................................................

//
//G.Ragavan said...
ha ha ha I am sure...this post is by a hardcore DMK guy... itz hilarious to read. :) pls continue.
//

repeatey!!!!

By லக்கிலுக்
//
லக்கிலுக் அவர்களே இதை நாங்கள் எப்படி புரிந்துகொள்ள வேண்டும்?

By Great at 10/30/2008 12:29 AM


....................................................................................

இலைக்காரன் பதிவே வரவில்லை என்று 80 கோடி இந்துக்களும் தவமிருந்து வெண்டிக் கொண்டார்கள்.
:)

By கோவி.கண்ணன் at 10/30/2008 12:48 AM


....................................................................................

:-)))....

By விஜய் ஆனந்த் at 10/30/2008 1:40 AM


....................................................................................



இதுங்க எல்லாம் எங்க உருபட போகுதொ??

By Pisasu at 10/30/2008 10:42 PM

Monday, November 17, 2008

வாழ்வுக்கும் சாவுக்குமிடையிலான அந்த ஐந்து வினாடிகள்




Like you, this man too, had a dream.

Like you, he too pushed his way into the crowded train

Like you, he too wanted to get going before he got delayed

Unlike you, he slipped and fell in the gap between the train and the platform at Kandivli station

And eight bogies went over him


Find out what happened to this man on ?



obviously has a guardian angel and supportive bystanders who told him exactly what he shouldn't do $B!=(B move. And so, the man lay absolutely still as eight bogies of the train passed over him $B!=(B centimeters from his head. Within seconds the 12-coach train passed and the man clambered out, unaided, unhurt, but too shocked to speak to us after his near-death experience???


நன்றி மெயில் பண்ணிய நண்பனுக்கு

Thursday, November 13, 2008

சிறந்த பெண்மணி - Hats off... She is such a one of the great woman in the world - உண்மைக் காதல்.

உண்மைக் காதல்.. படங்களிலும் கதைகளிலுமே கேள்வி பட்டிருக்கின்றோம். ஆனால் வாழ்க்கையில் என்னைப் பொருத்தவரைக்கும் அனுபவம் கசப்பானதே.. ஆனால் உண்மையிலேயே எங்கோ ஒர் மூலையில் உண்மைக் காதல் உண்டு என்பதற்கு சாட்சிதான் இந்த காட்சிகள்.

அவன் ஈராக் போரில் அமெரிக்கா படையில் பணியாற்றினான்... பின்னர் நான் சொல்ல வேண்டியதில்லை.. நீங்களே படத்தைப் பார்த்துப் புரிந்துகொள்வீர்கள்.
















இதுதான் உண்மையான காதல்.. இப்படி ஒரு பெண் எந்தனை பேருக்கு கிடைப்பால்..

Boys vs Girls - வித்தியாசம் தெரிகின்றதா..??
































Monday, November 10, 2008

குழந்தைகள் கூட அறிவார்கள் யார் சிறந்தவர் என்பதை....

இது எப்படி இருக்கு...??





















Thursday, October 23, 2008

எல்லோருக்கும் வணக்கங்கண்ணா..

எல்லோருக்கும் வணக்கங்கண்ணா.. இப்பதானே வந்திருக்கோம் இனிமேல் பாருங்கண்ணா ஏதோ நானும் என்னால முடிஞ்சத copy, past பண்ண ட்ரை பண்ணுரணுங்கோ.. சொந்தமாவும் இருக்கு அது அப்ப... அப்ப... வரும். இனி தொடரும் எனது கும்மி உங்களோடு சேர்ந்து.. அதுவரை வணக்கம்.. வணக்கம்.. வணக்கமுக்கோ...

இணையத்தள அறிமுகம்.

தமிழ் இணையத்தளங்கள் எண்ணிக்கையற்றவைகள் அதிலும் ஈழத்தமிழ்ர்களின் செய்திகளை அறிய அவர்களால் இலங்கையிலிருந்தும் வெளியிலிருந்தும் ஏராளமான இணையத்தளங்கள் இயக்கப்படுகின்றன. இருந்தாலும் செய்தி தளங்கள் எனும்போது எல்லாமே கிட்டத்தட்ட ஒரே மாதிரியாத்தான் இருக்கின்றது.

ஆனால் இந்த தளம் கொஞ்சம் வித்தியாசமாக தெரிகின்றது. செய்திகளில் மாத்திரமல்ல அதன் உள்ளடக்கம். உடனுக்குடன் செய்திகளை கொண்டுவரும் வேகம். ஏனைய தளங்களில் காணப்படாத செய்திகள்.மற்றும் பக்கச்சார்பின்னை என்பன முக்கியமாக குறிப்பிடலாம். அண்மையில் நண்பர் இந்த தளத்தைப் பற்றி மின்னஞ்சல் செய்தான் . பரவாயில்லை நன்றாகத்தான் உள்ளது. உங்கள் பார்வைக்கு தள முகவரி.

http://globaltamilnews.com/

Wednesday, October 22, 2008

சிரிக்க.. ஒரு யானைக்கதை.

சத்தியமா உண்மையா நடந்ததுங்கோ..நானும் நண்பணும் எங்கள் ஊரிலிருந்து சற்று தொலைவிலிருந்த ஒர் ஊருக்கு ஒரு நண்பணை பார்க்க சென்றிருந்தோம். கொஞ்சம் காட்டுப் பாங்கான பிரதேசம் யானைகளின் நடமாட்டம் அதிகமுள்ள இடம். மோட்டார் சைக்கிளில் போவது என்பது கொஞ்சம் பயம்தான் அதுவும் மங்கலான மாலை வேளயில் எங்கள் பயணம்.



நண்பன் போகும் போதே பின்னாலிருந்தே ஆரம்பித்துவிட்டான் டேய் மச்சான் இந்த இடத்திலதான்டா ஒருத்தன யானை தூக்கிபோட்டு மிதிச்சது.. இந்த இடத்துலதான்டா ஒருத்தன ஓட.. ஓட.. விரட்டினது என பல கதைகள் அவன் சொன்னத கணக்கில எடுக்கலன்னாலும்.. கொஞ்சம் மனசுக்குள்ள பயம்தான்.. யப்பா அதுவும் யானை அதுவும் காட்டு யானை மாட்டுபட்டம்... சங்குதான்.

இப்படி கொஞ்ச தூரம் போய் இருப்பம் நண்பன் திடீரென்று மச்சான் யானைடா.. "யானைடா என்று கத்த ஆரம்பிச்சுட்டான்.."



நானோ "அட போட.. சும்மா விடாத.."



அவன் "இல்லடா உண்மையா யானடா"



நான் "எங்கடா"



அவன் "முன்னால ஒருங்க பாருடா"



யப்பா முன்னால ஒரு ஓரமா இருந்து யானை எங்களை நோக்கி வருகின்றது.. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. பிரேக் பிடித்தேன்.. டமால் இருவரும் கீழே.. மச்சான் ஓடுடா.. நண்பன் சொல்ல இருவரும் ஆளுக்கொளு திசையில் எதுவுமே தெரியவில்லை.. கண் எல்லாம் இருட்ட ஒரு பெரிய மரத்தில் கஸ்டப்பட்டு ஒடி ஏறிட்டன். பின்னங்கால் புரடியிலடிக்க ஓடுவது... என்று சொல்லுவாங்களே அப்படி ஒரு ஓட்டம். நண்பனைப் பார்த்தேன் அவனும் எதிரே ஒரு மரத்திலே தஞ்சம். நல்லவேளை இலகுவாக ஏறக்கூடிய மரம்... இருவருமே பாதுகாப்பான இடத்தில். அதுக்கு அப்புறம்தான் யானை வந்த திசையைப் பார்க்க மனம் வந்தது.



யானை மெதுவாக எங்கள் பைக் விழுந்து கிடந்த இடத்திற்கு வந்து பைக்கை மெதுவாக தூக்க முயற்சி செய்தது ஆனால் என்ன நடந்ததோ தெரியாது யானை எங்களை விட வேகமாக அதுவும் பெரிய சத்தம் போட்டு கத்துக் கொண்டு ஓடியது. அடப்பாவி எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் நண்பனைப் பார்க்க நண்பன் என்னைப்பார்க்க இருவருக்கும் குழப்பம்.. அப்படியே கொஞ்சநேரம் இருந்து சுற்றும் முற்றும் பார்த்து (யானை திரும்ப வந்தாலும்.. கொஞ்சம் யாக்கிரதைதான்..ஓடின ஓட்டம் அப்படி.. ) மெதுவாக இறங்கி பைக் கிட்ட போய் பார்த்த போதுதான் தெரிந்தது.. யானை பைக்கைப் பிடித்து தூக்கிய இடம் சைலன்சர் என்று.. அதில் ஏதோ எரிந்து தீய்ந்த அடையாளம்.. எனக்கும் நண்பனுக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.. என்னத்த சொல்ல...

இப்படி உங்களுக்கும் ஏதாவது யானைக் கதை இருக்கா.. வாங்க வந்து சொல்லுங்க.